ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவம் கடந்த 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் வளைகுடா நாடுகள் மற்றும் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் இந்த நாடுகள் தங்களது வான்வழியை மூடியுள்ளன.
இந்நிலையில், மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளுக்கான விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். பல்வேறு வளைகுடா நாடுகள் தங்கள் வான்பரப்பை மூடியுள்ளதால் இந்தியாவில் இருத்து மத்திய கிழக்கு செல்லும் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் கடந்த 4 நாட்களில் 1,400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் 39 லட்சம் இந்தியர்களும், சவுதி அரேபியாவில் 27.5 லட்சம் பேரும், குவைத்தில் 10.1 லட்சம் பேரும், கத்தாரில் 8.3 லட்சம் பேரும், ஓமனில் 6.62 லட்சம் பேரும், பஹ்ரைனில் 3.47 லட்சம் பேரும் வசித்து வருகின்றனர். குறிப்பாக ஈரானில் சுமார் 10,000 இந்தியர்கள் என 1 கோடி இந்தியர்கள் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வசித்து வருகின்றன. அவர்களை பாதுகாப்பாக உறுதி செய்ய வேண்டும் என இந்திய அரசை அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
