இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக ரிச்சர்ட் வர்மா என்பவரின் பெயரை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முன்மொழிந்துள்ளார்.
பட மூலாதாரம், US STATE DEPARTMENT
அவரது நியமனம் உறுதியாகும் என்றால், இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கராக வர்மா ஆவார்.
வழக்கறிஞரான வர்மா அமெரிக்க ராஜாங்க அமைச்சில் பணியாற்றியுள்ளார்.
இந்திய ராஜீய அதிகாரி ஒருவர் தனது வீட்டுப் பணிப்பெண்ணின் தொடர்பில் விசா மோசடி செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு சென்ற ஆண்டு நியூயார்க்கில் கைதுசெய்யப்பட்டதை அடுத்து இந்தியா அமெரிக்கா இடையிலான ராஜீய உறவுகள் முறுகல் அடைந்திருந்தன.
தன் மீதான குற்றச்சாட்டுகளை அந்த அதிகாரி மறுத்திருந்தார்.
இம்மாதத்தின் பிற்பகுதியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டன் செல்லவுள்ளார்.