14 வருடம் என்பது மிக நீண்ட காலம். இதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தியாவுக்கு என் இதயத்தில் தனி இடம் உண்டு.
நிச்சயமாக இதோடு நான் விடைபெறப்போவது இல்லை. நீங்கள் மீண்டும் என்னை பார்ப்பீர்கள்.
புதிய சவாலாக, வரவிருக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட நான் முடிவெடுத்திருக்கிறேன்.

இது எனக்கு மிகவும் உற்சாகமான அடுத்த நகர்வு. புதிதாக ஒன்றை அனுபவிக்கவும், ஒரு வீரராக அடுத்த கட்டத்துக்கு செல்லவும் இது எனக்கு ஒரு வாய்ப்பு.
புதிய நாடு, புதிய சுற்றுச்சூழல், புதிய சவால். விரைவில் உங்களைச் சந்திக்கிறேன்” என்று டு பிளெஸ்ஸிஸ் தெரிவித்திருக்கிறார்.
ஐ.பி.எல்லில் பெங்களூரு, டெல்லி ஆகிய அணிகளில் ஆடியிருந்தாலும் இன்றும் சென்னை அணியின் எல்லைச் சாமி என ரசிகர்கள் கொண்டாடும் டு பிளெஸ்ஸிஸுக்கு இப்போது 41 வயது, 2027 சீசனில் அவர் பங்கேற்பாரா என்பது சந்தேகம்தான். எனினும் அவரின் ஃபிட்னஸ் இந்த வயதிலும் பிரமிக்கத்தக்கதாக இருப்பதால் அவரின் வார்த்தையை நம்பி 2027-ல் அவரை எதிர்பார்ப்போம்!