இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளதாக ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.
அமெரிக்க அதிபரின் டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்பு குறித்து ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியதாவது, “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நடத்தை, இந்தியாவைப் பொறுத்தவரையில் தற்போது நன்றாக உள்ளது.
வரி உயர்வைப் பொறுத்தவரை, நம் நாடு இதுவரை அதில் சேர்க்கப்படவில்லை. டிரம்ப் கடந்த முறை அதிபராக இருந்தபோதும், பிரதமர் மோடியுடனான உறவு நல்ல முறையில் இருந்தது. எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்’’ என்று தெரிவித்தார்.