இந்தியா மீதான வரிவிதிப்பால் அமெரிக்காவின் நல்லுறவு பாதிக்கப்படுவதாக அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரும் அமெரிக்கா – இந்தியா கூட்டமைப்பின் இணைத் தலைவருமான ரோ கன்னா பேசுகையில்,
இந்தியாவுடனான அமெரிக்காவின் நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கடந்த 30 ஆண்டுகளாக, அமெரிக்க – இந்திய உறவை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு பணிகளை டிரம்ப்பின் நடவடிக்கைகள் குறைமதிப்புக்கு உட்படுத்துவதாகத் தெரிகிறது. டிரம்ப்பின் கொள்கைகளால், சீனா மற்ரும் ரஷ்யாவை நோக்கி இந்தியாவை நகர்த்துகிறது. இது அமெரிக்காவுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.