பெஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நடவடிக்கைகளை போராகக் கருதுவதாக பாகிஸ்தான் கூறுகிறது.
சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த நிலையில், பதில் நடவடிக்கையாக சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.
சிம்லா நதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்த பாகிஸ்தான், இதனைப் போராகக் கருதுவதாகத் தெரிவித்துள்ளது.
1971 ஆம் ஆண்டில் ஏற்பட்ட போரை நிறுத்தும்வகையில், 1972-ல் சிம்லா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
சிம்லா ஒப்பந்தத்தின்படி, இருநாடுகளும் தங்கள் நாட்டுப் போர்க்கைதிகளை அமைதியான முறையில் விடுவிக்க வேண்டும். இரு நாடுகளின் எல்லைகளை அமைதியான முறையில், பேச்சுவார்த்தை மூலம் தீர்மானிக்க வேண்டும்; எல்லைப் பிரச்னைகளையும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்.