இந்திய அணியை பாகிஸ்தான் எப்படியாவது வீழ்த்தியாக வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி பேசியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இதையும் படிக்க: எனது ரசிகர்கள் மீண்டும் கிடைத்துவிட்டதாக உணர்கிறேன்: ஹார்திக் பாண்டியா
முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெறும் முனைப்போடும், முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்த பாகிஸ்தான், தொடரிலிருந்து வெளியேறாமல் இருக்கும் எண்ணத்தோடும் விளையாடி வருகின்றன.
எப்படியாவது வென்றுவிடுங்கள்
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெறுவதற்கு முன்பாக பாகிஸ்தான் அணி வீரர்களிடம் பேசிய அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி, இந்திய அணியை பாகிஸ்தான் எப்படியாவது வீழ்த்தியாக வேண்டும் என தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
PCB Chairman Mohsin Naqvi meets with Pakistan players in Dubai before the match vs India.#PAKvIND | #ChampionsTrophy | #WeHaveWeWill pic.twitter.com/q4IP7Slymo
— Pakistan Cricket (@TheRealPCB) February 22, 2025
இதையும் படிக்க: துபையில் வெற்றி பெற எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும்? ஷுப்மன் கில் பதில்!
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான போட்டி மிகப் பெரிய போட்டியாக இருக்கப் போகிறது. என்னை பொருத்தவரையில் பாகிஸ்தான் அணி நல்ல ஃபார்மில் தயாராக இருக்கிறது எனக் கூறுவேன். மிகவும் முக்கியமான இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி, இந்தியாவை எப்படியாவது வீழ்த்தியாக வேண்டும். இருப்பினும், வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் நாங்கள் எங்கள் அணியுடன் உறுதியாக துணை நிற்போம் என்றார்.