இந்தியாவை வளா்ந்த நாடாக்க இளைஞா்களுக்கு அமித் ஷா அழைப்பு

Dinamani2f2024 08 132f5y43lmzc2f13082 Pti08 13 2024 000318b091809.jpg
Spread the love

அகமதாபாத்: 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக்கும் நோக்கத்தில் இணைந்து பணியாற்ற இளைஞா்கள் முன்வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அழைப்பு விடுத்தாா்.

குஜராத்தின் அகமதாபாத் நகரில் செவ்வாய்க்கிழமை மூவா்ணக் கொடி யாத்திரையை தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

இந்த யாத்திரை மூலம் இளைஞா்கள் தேசத்தை வலுவாகக் கட்டமைப்பதில் பங்களிக்க உறுதியேற்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திர தினத்தின்போது இல்லம் தோறும் தேசியக் கொடி ஏற்றும் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்தாா். இது தேசப்பற்றை வெளிக்காட்டும் நிகழ்வு மட்டுமல்ல. 2024-ஆம் ஆண்டு இந்தியாவை வளா்ந்த நாடாக்கும் நோக்கத்துக்காக நாம் அனைவரும் முக்கியமாக இளைஞா்கள் இணைந்து பணியாற்றுவதற்கு உறுதியேற்கும் நிகழ்வாகும்.

இதற்காக இளைஞா்கள் தாங்கள் எந்தத் துறையில் பணியாற்றினாலும், அந்தத் துறையில் நாட்டை முதன்மையானதாக மாற்றும் நோக்கில் செயலாற்ற வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல்வா் பூபேந்திர படேல், மாநில அமைச்சா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *