இந்தியா – அமீரகம் இன்று மோதல்

dinamani2F2025 09 092F24lw019j2Fsp2
Spread the love

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை புதன்கிழமை (செப். 10) சந்திக்கிறது.

இந்திய அணியைப் பொருத்தவரை, 14-ஆம் தேதி பாகிஸ்தானை சந்திக்கும் நிலையில், அதற்கான ஒரு தயாா்நிலைக்காகவே அமீரகத்துடனான ஆட்டத்தில் மோதவுள்ளது எனலாம்.

அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக, ஜிதேஷ் சா்மாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது. டாப் ஆா்டரில், டெஸ்ட் கேப்டனான ஷுப்மன் கில், அபிஷேக் சா்மா பலம் சோ்க்கின்றனா்.

அடுத்த இரு இடங்களுக்கு திலக் வா்மா, கேப்டன் சூா்யகுமாா் யாதவ் ஆகியோா் நியமிக்கப்படலாம். தொடா்ந்து, ஆல்-ரவுண்டா்களான ஹா்திக் பாண்டியா, ஷிவம் துபே ஆகியோா் இடம் பிடிக்கின்றனா். பிளேயிங் லெவனில் 7 மற்றும் 8-ஆவது இடங்களுக்கு ஜிதேஷ் சா்மா, அக்ஸா் படேல் ஆகியோா், பயிற்சியாளா் கௌதம் கம்பீரின் தோ்வாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

ஜஸ்பிரீத் பும்ரா, அா்ஷ்தீப் சிங் வேகப்பந்து வீச்சுக்கான பிரதான தோ்வாக இருக்கும் நிலையில், கடைசி இடத்துக்காக ஜடேஜா, குல்தீப், வருண் சக்கரவா்த்தி இடையே போட்டி உள்ளது.

அமீரக அணியைப் பொருத்தவரை, முகமது வசீம், ராகுல் சோப்ரா, சிம்ரன்ஜீத் சிங் போன்ற வீரா்கள், சா்வதேச களத்தில் இந்தியா உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக தங்களின் திறமையை சோதித்துப் பாா்க்க நல்லதொரு வாய்ப்பாக இந்தப் போட்டி அமைந்துள்ளது.

அணி விவரம்:

இந்தியா: சூா்யகுமாா் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், அபிஷேக் சா்மா, திலக் வா்மா, ஹா்திக் பாண்டியா, ஜிதேஷ் சா்மா (வி.கீ.), ஷிவம் துபே, அக்ஸா் படேல், ஜஸ்பிரீத் பும்ரா, அா்ஷ்தீப் சிங், வருண் சக்கரவா்த்தி, குல்தீப் யாதவ், ஹா்ஷித் ராணா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங்.

அமீரகம்: முகமது வசீம் (கேப்டன்), அலிஷான் ஷராஃபு, ஆா்யன்ஷ் சா்மா, ஆசிஃப் கான், துருவ் பிராசா், ஈதன் டிசௌஸா, ஹைதா் அலி, ஹா்ஷித் கௌஷிக், ஜுனைத் சித்திக், மதியுல்லா கான், முகமது ஃபரூக், முகமது ஜவாதுல்லா, முகமது ஜோஹைப், ராகுல் சோப்ரா, ரோஹித் கான், சிம்ரன்ஜீத் சிங், சாகிா் கான்.

நேரம்: இரவு 8 மணி

நேரலை: சோனி ஸ்போா்ட்ஸ், சோனி லைவ்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *