தற்போதைய உலகளாவிய வர்த்தகத்தில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. அதில் ஒன்று தான், அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரி.
இதனால், இந்தியா மற்றும் அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரியை நீக்கும் உடனடி கட்டமைப்பு வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
நம்முடைய இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மூலம் பரஸ்பர வரியை முழுமையாக நீக்கும் வழியை பார்க்க வேண்டும். அதற்கு இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
காரணம், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் இதுபோன்ற பல்வேறு அம்சங்களில் பணிபுரிந்து வருவதால், அதில் அவசரம் காட்டவில்லை” என்று கூறியிருக்கிறார்.