கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் (பிப்ரவரி 2), இந்திய பிரதமர் மோடி – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் முடிவாகி உள்ளதை அறிவித்தனர்.
இந்த ஒப்பந்தம் குறித்த முழு தகவல்களும் நேற்று வெளியாகின.
அதன்படி, இந்த ஒப்பந்தம் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய 7 அம்சங்கள்.

> இந்தியா மீதான வரியை 25 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைத்திருக்கிறது அமெரிக்கா.
ஆனால், இந்தியா எத்தனை சதவிகித வரியைக் குறைக்க உள்ளது என்பது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை.
இந்தியா அமெரிக்கப் பொருள்கள் மீதான வரியைக் குறைக்கும் அல்லது ரத்து செய்யும் என்று தான் கூறப்பட்டுள்ளது.
> ஆசிய நாடுகளிலேயே ஜப்பானுக்கு அடுத்து இந்தியாவிற்குத் தான் மிகக் குறைந்த வரி.
இது நமது போட்டி நாடுகளான சீனா, வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளை விட மிகப்பெரிய ப்ளஸ்.