இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் எதிர்ப்புகள்|India–US Trade Deal: Why Opposition Is Crying Foul

Spread the love

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு வரவேற்பு இருந்தாலும், சில எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

இந்த எதிர்ப்புகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி‌ உள்ளிட்ட பலர் பதிவு செய்துள்ளனர்.

அந்த எதிர்ப்புகளின் தொகுப்பு இதோ…

> இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்க விவசாய மற்றும் பால் பொருள்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன… வரிகளும் குறைக்கப்பட்டுள்ளன.

இதனால், அமெரிக்காவின் விவசாயப் பொருள்கள் மற்றும் பால் பொருள்களின் இறக்குமதி இங்கே அதிகரிக்கும்.

ட்ரம்ப் - மோடி

ட்ரம்ப் – மோடி

இது 72 கோடி விவசாய மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நலனைப் பாதிக்கும்.

இந்திய விவசாயப் பொருள்களின் மீது அமெரிக்கா பெருமளவு எந்தச் சலுகையும் வழங்கவில்லை.

இதனால், அமெரிக்கப் பொருள்களுடன் இந்திய உற்பத்திகளால் போட்டியிட முடியாமல் போகலாம்.

> “ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கமாட்டோம்’ என்கிற உத்தரவாதத்தில் தான் இந்த ஒப்பந்தம் முடிவாகி உள்ளது.

இது சரண்டர்‌ இல்லையா… இது இந்தியாவின் இறையாண்மையைப் பாதிக்கிறது அல்லவா? அமெரிக்காவின் கட்டளையைப் பின்பற்றுகிறதா இந்தியா?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *