14-வது ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை (21 வயதுக்கு உட்பட்டோர்) நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 இன்று வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் மதுரை ரேஸ்கோர்ஸ் சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தில் 24 அணிகளுடன் நடைபெற்றது.
இன்றைய இறுதிநாளில் வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்தியா ஆர்ஜென்டினாவை 4-2 என்ற கணக்கில் வென்று 4-ஆவது பதக்கத்தை வென்றிருக்கிறது. இதற்குமுன் இந்திய ஹாக்கி அணி 1997-வெள்ளி, 2001மற்றும் 2016-தங்க பதக்கங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து நடப்பு சாம்பியன் ஜெர்மனி (7 முறை வென்ற அணி) மற்றும் ஸ்பெயின் அணிகள் இன்று இரவு 8 மணிக்கு ஆட்டத்தைத் தொடங்கி விளையாடிக் கொண்டிருக்கின்றன. இதில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைக்கும்.