இந்தியா உடனான ஒப்பந்தம் மற்றும் இந்தியா மீதான வரி குறைப்பு குறித்து ட்ரம்ப் பேச்சு|Trump gives Green light on India’s Trade deal and Tariff

Spread the love

தற்போது அமெரிக்கா, இந்திய பொருள்களுக்கு 25 சதவிகித வரி ப்ளஸ் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் கூடுதல் 25 சதவிகித வரி என மொத்தம் 50 சதவிகித வரி வசூலித்து வருகிறது.

இதை குறைக்கவும், வர்த்தக ஒப்பந்தத்திற்காகவும் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது இந்திய அரசு.

இந்த நிலையில், நேற்று இந்தியாவின் அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் பதவியேற்பு நிகழ்ச்சி அமெரிக்காவில் நடைபெற்றது.

ட்ரம்ப் - செர்ஜியோ கோர்

ட்ரம்ப் – செர்ஜியோ கோர்

அந்த நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், “இந்தியா உடன் ஒப்பந்தம் செய்ய உள்ளோம். அது முன்பு இருந்த ஒப்பந்தத்தை விட, முற்றிலும் வேறானதாக இருக்கும்.

இப்போது இந்தியாவிற்கு என்னை பிடிக்கவில்லை. ஆனால், அவர்களுக்கு மீண்டும் என்னை பிடிக்கும்.

நியாயமான ஒப்பந்தம் போடவிருக்கிறோம். அவர்கள் மிக நல்ல பேச்சுவார்த்தைகாரர்கள். அதனால், செர்ஜியோ அது குறித்து பார்க்க வேண்டும்.

இந்தியா உடனான ஒப்பந்தம் விரைவில் நடக்க உள்ளது. அது அனைவருக்கும் நல்லதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *