ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் – ஏன் முக்கியமானது?
ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் என 27 ஐரோப்ப நாடுகளைக் கொண்டது ஐரோப்பிய ஒன்றியம்.
இதில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு துறையில் சிறந்தது… ஒவ்வொரு விதத்தில் சிறந்தது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியா பலதரப்பட்ட நாடுகளுடன் எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும். அந்தந்த நாடுகளின் சிறந்தவைகளையும் இந்தியாவால் பெற முடியும்.

இந்தியா – ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தத்தின் படி…
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதியாகும் கிட்டத்தட்ட 70 சதவிகித பொருள்களுக்கு வரிகளே இல்லை.
இதனால், கிட்டத்தட்ட 75 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்தியாவின் ஏற்றுமதிகள் பலனடையும்.
இந்த ஏற்றுமதிகளில் ஜவுளி, தோல் பொருள்கள், காலணிகள், தங்கம் மற்றும் நவரத்தினங்கள், கடல்சார் பொருள்கள் போன்ற துறைகள் இடம்பிடித்துள்ளன.
ஸ்டீல் மற்றும் அலுமினியம், ஆட்டோமொபைல்ஸ், இயந்திரம் மற்றும் இன்ஜீனியரிங் பொருள்கள், மதுபானங்கள் ஆகிய துறைகளுக்கு பெரியளவில் வரிச்சலுகைகள் கிடைத்துள்ளன.
முன்பு, ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்திய சேவைத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டு வந்தது. அந்தக் கட்டுப்பாடுகள் எல்லாம் இப்போது ஒப்பந்தத்திற்குப் பிறகு நீக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்திய பொருள்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 2 -150 சதவிகிதம் வரை வரி விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.