இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்காவை எரிச்சலூட்டிய காரணம் என்ன?|India-EU Trade Pact Rattles US Over Tariffs and Ukraine War

Spread the love

இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவிகிதம் வரி விதித்து வருகிறது. அவ்வப்போது, இந்த வரி இன்னும் கூடுதலாக்கப்படலாம் என்று அந்த நாட்டின் அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து வருகிறார்.

இந்த நிலையில்தான், உலகமே இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு விஷயம் – “இந்தியா – ஐரோப்பிய ஒன்றியத்தின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்’.

இந்த ஒப்பந்தம் அமெரிக்காவைத் தாண்டிய சந்தைக்கு எளிதான மட்டுமல்லாமல்… வரி இல்லாத சந்தைக்கும் இந்தியாவை அழைத்துச் செல்கிறது.

இது அமெரிக்காவின் கண்ணை உறுத்தாமலா இருந்திருக்கும்?

ஸ்காட் பெசென்ட்

ஸ்காட் பெசென்ட்
Scott Bessent | X

“ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருவதால் இந்தியா மீது கூடுதல் 25 சதவிகித வரியை விதித்திருக்கிறோம்.

ஆனால், கடந்த வாரம் என்ன நடந்தது? ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளன.

ரஷ்யா – உக்ரைன் போரினால் ஐரோப்பிய நாடுகள்தாம் போர் முனையில் உள்ளன.

இந்தியா தடை செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெய்களை வாங்குகிறது. ஐரோப்ப நாடுகளோ சுத்திகரிக்கப்பட்ட பொருள்களை வாங்குகின்றன. ஆக, ஐரோப்பிய நாடுகள் அவர்களுக்கு எதிரான போர்களுக்கு அவர்களே நிதியளிக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *