இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்

Dinamani2f2024 10 232f64ydcx1n2fnarendra Modi Xi Jinping Edi Ani.jpg
Spread the love

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தினார்.

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு தூதரக உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்திய குடியரசுத் தலைவர் திரெüபதி முர்முக்கு எழுதிய கடிதத்தில் “டிராகன்-யானை’ ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஷி ஜின்பிங்குக்கு வாழ்த்துகள் தெரிவித்த திரெüபதி முர்மு, இந்தியா-சீனா இடையேயான உறவுகள் இருநாடுகள் மட்டுமின்றி உலகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது என குறிப்பிட்டார்.

அதேபோல் சீன பிரதமர் லீ கியாங்குக்கு பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், “இருநாடுகள் இடையேயான உறவுகள் நிலையான வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது.

இந்தியா, சீனா ஆகிய இரு பழம்பெரும் நாகரிகங்களும் மனித வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு அமைதி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது’ என கூறியதாக சீன அரசின் செய்தித் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *