தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கணினி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். வேலை நிமித்தமாக கடந்த 9 ஆண்டுகளாக கிருஷ்ணகிரியில் வசித்து வரும் சுரேஷ்குமார் “இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் ‘ இடம்பிடித்திருக்கிறார்.
இது குறித்து சுரேஷ்குமார் நம்மிடம் பேசும்போது,
“என்னுடைய அப்பா சிறுவயதில் சைக்கிளில் இன்ஜின் ஒன்றைச் சேர்த்து வண்டியைப் போல இயங்க வைத்தார். அவர் அந்த சைக்கிளில் போகும் போது, ஊர்மக்கள் எல்லோரும் அப்பாவையும் சைக்கிளையும் வியந்து பார்ப்பார்கள். ஒரு சாதாரண சைக்கிளை ஆக்சிலரேட்டர், பிரேக் போன்றவற்றை வைத்து டிவிஎஸ் 50 (TVS 50) வண்டி போல மாற்றிய என் அப்பாவின் கடின உழைப்புக்குக் கிடைத்த பெயரையும் பாராட்டுகளையும் பார்க்கும்போது, அவரைப் போலவே நானும் சாதனை புரிய வேண்டும் என 13 வயதிலிருந்தே எண்ணம் இருந்தது. நான் +2 படிக்கும் போது அப்பா இறந்துவிட்டதனால் படிப்பில் அதிக கவனம் செலுத்தி கணினித்துறையில் M.Phil வரை படித்தேன்.