இந்தியா மீது இரண்டாம்கட்ட வரி விதிப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகமாக பதிலளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் வெள்ளிக்கிழமையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உக்ரைன் போரை நிறுத்துவதற்காக என்று கருதப்பட்ட பேச்சுவார்த்தையானது, இறுதிநேரத்தில் அதனை டிரம்ப் மறுத்துக் கூறினார்.
அலாஸ்காவில் சுமார் 3 மணிநேரத்துக்கு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என்று டிரம்ப்பும், புரிந்துணர்வு ஏற்பட்டிருப்பதாக புதினும் கூறியது சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது இரண்டாம்கட்ட வரி விதிப்பது குறித்தும் டிரம்ப் கூறினார்.
முன்னதாக, அமெரிக்கா – ரஷியா இடையே பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், இந்தியா மீதான வரி அதிகரிக்கப்படலாம் என்று அமெரிக்க நிதிச் செயலர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இதுகுறித்து செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில்,
ரஷியா, அதன் எண்ணெய் வாடிக்கையாளரை இழந்து விட்டது. 40 சதவிகிதம் எண்ணெய் வாங்கும் இந்தியாவை இழந்து விட்டது. சீனாவும் அதிகளவில்தான் வாங்குகிறது. ஒருவேளை, நான் இரண்டாம்கட்ட வரியை விதித்தால், அதன் தாக்கம் மோசமானதாக இருக்கும். அதனைச் செய்ய வேண்டுமென்றால், நான் செய்வேன். அதனைச் செய்ய வேண்டி போகாமலும் போகலாம் என்று தெரிவித்தார்.
இதன் மூலம், இந்தியா மீதான இரண்டாம்கட்ட வரியை டிரம்ப் விதிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என்று எடுத்துக் கொள்ளலாமா? ஆனால், அதுதான் இல்லை; ஏனெனில், டிரம்ப்பை நம்புவது கடினம்தான்.