ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து போர் தொடுத்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நீடிக்கிறது. 10 நாள்களைக் கடந்து போர் தொடர்ந்துவரும் நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஹார்மூஸ் ஜலசந்தி வழியே சரக்கு கப்பல்கள் பயணிக்க வேண்டிய சூழலில், ஈரான் ஹார்முஸ் பகுதியை மூடுவதாக அறித்தது. தற்போது ஏற்பட்டிருக்கும் எரிவாயு உள்ளிட்ட எண்ணெய் பொருள்களின் தட்டுப்பாடுக்கு இதுவும் ஒரு காரணம்.

இதற்கிடையில், ஹார்மூஸ் பகுதியை மூடுவதாகவும், அந்தப் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் அறிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஒரு துறைமுகத்திலிருந்து தாய்லாந்து கொடியுடன் புறப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்று ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே தாக்கப்பட்டதாக ராயல் தாய் கடற்படை தெரிவித்துள்ளது.