இந்தியா வரும் BTS இசைக்குழு : மும்பை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள் : ரசிகர்கள் ஆவல் – Kumudam

Spread the love

தென் கொரிய கே-பாப் (கொரிய பாப் இசை ) இசைக்குழுவான பி.டி.எஸ். , 2010களின் பிற்பகுதியில் சர்வதேச நட்சத்திரமாக உயர்ந்தது. ஜின், சுகா, ஜே-ஹோப், ஆர்.எம்., ஜிமின், வி, மற்றும் ஜங்கூக் ஆகிய ஏழு உறுப்பினர்களைக் கொண்ட பி.டி.எஸ். இசைக்குழு. உலகம் முழுவதும் அதிகளவில் ரசிகர்களை வைத்துள்ளனர். 

2015-ம் ஆண்டு பிடிஎஸ் இசைக்குழு உலகம் முழுவதும் இசைப்பயணத்தை தொடங்கினர்.இவர் தற்போது புதிய ஆல்பம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 2026 மே முதல் டிசம்பர் வரை சுமார் 60 முதல் 65 இசை நிகழ்ச்சிகளை நடத்தத இந்த குழு  திட்டமிட்டுள்ளது.

BTS-ன் மேலாண்மை நிறுவனமான HYBE, கடந்த செப்டம்பர் 2025-ல் மும்பையில் ‘HYBE India’ என்ற தனது அலுவலகத்தைத் தொடங்கியது. இது BTS போன்ற பெரிய குழுக்கள் இந்தியாவுக்கு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த 27ம் தேதி அன்று ஒரு நேரலை நிகழ்ச்சியில், BTS உறுப்பினர் கிம் டேஹியுங் (Kim Taehyung – V), இந்திய ரசிகர்களை நோக்கி “நமஸ்தே இந்திய ஆர்மி, அடுத்த ஆண்டு சந்திப்போம்” என்று கூறினார். இது இந்திய ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

2026ம் ஆண்டின் முற்பகுதியில் மும்பையில் இசை நிகழ்ச்சியை நடத்த BTS குழுவின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், இதுவரை இந்த இசைக்குழுவின் நிறுவனமான BIGHIT MUSIC அல்லது HYBE, இந்தியாவுக்கான தேதிகள் அல்லது இடங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *