இந்தியா Vs சீனா: சீன விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட அருணாச்சலப் பெண்; இந்தியா கடும் சாடல்! | Shanghai Shock: Arunachal Woman Stopped, India Fires Back

Spread the love

சீனாவின் நடவடிக்கை

“நவம்பர் 21, 2025-ம் தேதியில் நான் சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 18 மணிநேரம் தடுத்து நிறுத்தப்பட்டேன்.

நான் அருணாச்சல பிரதேசத்தில் பிறந்திருப்பதால், என்னுடைய இந்திய பாஸ்போர்ட் செல்லாது என்று கூறினார்கள். இதற்கு காரணமாக, அவர்கள் அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் பிராந்தியம் என்று கூறுகிறார்கள்”

– இது அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பிரேமா வாங்ஜோம் தோங்டாக்கின் சமீபத்திய பதிவு.

ஷாங்காய் விமான நிலையம்

ஷாங்காய் விமான நிலையம்

இந்தப் பதிவு இந்தியா – சீனா உறவில் சிக்கலை கொண்டு வந்துள்ளது.

இந்தியாவின் மாநிலமாக இருந்து வரும் அருணாச்சல பிரதேசத்தை, 2006-ம் ஆண்டு முதல் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதை இந்தியா சற்றும் ஏற்றுக்கொள்ளவே இல்லை.

இந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.

“பிரேமா வாங்ஜோம் தோங்டாக் சீனாவின் சட்டப்படி நடத்தப்பட்டார்’ – இந்த சம்பவம் குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கூறும் காரணம் இது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *