மீண்டும் வாய்ப்பு கிடைத்தால்…
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத நிலையில், இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால், அது மிகவும் சிறப்பான விஷயமாக இருக்கும் என புஜாரா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். இந்திய அணிக்காக விளையாடுவதை நான் விரும்புகிறேன். அதே நேரத்தில், அணியில் இடம்பெறுவோமா? மாட்டோமா? என அதிகம் யோசிக்கவும் மாட்டேன். நிகழ்காலத்தில் இருப்பதையே நான் விரும்புகிறேன்.
இதுவரை இந்திய அணிக்காக விளையாடிய எனது கிரிக்கெட் பயணம் மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது. என்னுடைய இந்த கிரிக்கெட் பயணத்தில் எனக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை. கிரிக்கெட்டை நான் மிகவும் நேசித்து விளையாடுகிறேன். மகிழ்ச்சியாக என்னால் எவ்வளவு காலம் விளையாட முடிகிறதோ அதுவரை விளையாடுவேன். நான் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுகிறேன். என்னுடைய உடல்தகுதியிலும் கவனமாக இருக்கிறேன் என்றார்.