இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எந்தவொரு காயத்திலிருந்தும் எந்த நேரத்திலும் மீண்டு வரலாம் என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நாளை மறுநாள் (ஜனவரி 22) தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.