தென்னாபிரிக்க அணியைச் சேர்ந்த மோர்னே மோர்கெல் இதுவரை 86 டெஸ்டுகளில் விளையாடி 309 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
117 ஒருநாள் போட்டிகளில் 188 விக்கெட்டுகளும் ஐபிஎல் போட்டிகளில் 77 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். கடைசியாக 2018ஒல் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இலங்கையுடனான இந்திய தொடரில் தனிப்பட்ட காரணங்களால் மோர்னே மோர்கலால் பங்கேற்க முடியாமல்போனது. தற்போது, செப்.19ஆம் தேதி சென்னையில் தொடங்கும் வங்கதேசத்துக்கான டெஸ்ட் தொடரில் இருந்து இந்தியாவின் பந்துவீச்சு பயிற்சியாளராக பொறுப்பேற்கவுள்ளார்.