இந்தநிலையில், நாடு முழுவதும் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் தேசியக்கொடி மற்றும் இந்திய வீரர்களின் புகைப்படத்துடன் பட்டாசு வெடித்து கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில், மத்தியப் பிரதேசத்தின் போபால், இந்தூரில் வீதிகளில் நூற்றுக்கணக்கில் திரண்ட ரசிகர்கள், பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாராஷ்டிரத்தின் மும்பையில் இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய ரசிகர்களால் பெரும்பாலான இடங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்தன. மூவர்ண கொடியை ஏந்தியவாறு ரசிகர்கள் பாரத் மாதகி ஜே… எனக் கோஷமிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், ஜம்மு-காஷ்மீரிலும் இந்திய அணியின் வெற்றிக் கொண்டாட்டம் களைகட்டியது.
பாகிஸ்தான் சிந்து நதியில் ரூ. 80,000 கோடி தங்கம்! இந்தியாவுக்கு பங்குள்ளதா?