இந்திய இறையாண்மையை பாதுகாக்க உறுதியேற்போம்: அரசியல் கட்சித் தலைவர்கள் சூளுரை | leaders took oath for 79th independence day

1373097
Spread the love

சென்னை: நாட்​டின் 79-வது சுதந்​திர தினம் இன்று கொண்​டாடப்​படு​கிறது. இதையொட்டி அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வெளி​யிட்ட வாழ்த்து செய்​தி​களில் கூறி​யிருப்​ப​தாவது:

தமிழக காங்​கிரஸ் தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை: இந்​தி​யா​வில் வகுப்​பு​வாத சக்​தி​கள் தலை தூக்​காமல் இருக்க பரப்​புரை மேற்​கொண்டு இந்​திய இறை​யாண்​மையை பாது​காப்​போம். அனை​வருக்​கும் சுதந்​திர தின நல்​வாழ்த்​துக்​கள்.

முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம்: சுதந்​திரத்தை பேணிக்​காத்​து, எல்​லாரும் எல்​லா​மும் பெற வேண்​டும், இங்கு இல்​லாமை இல்​லாத நிலை வேண்​டும் என்​ப​தற்​கேற்ப அனைத்து தரப்பு மக்​களும் வளம் பெற சுதந்​திர தின நன்​னாளில் நாம் அனை​வரும் உறு​தி​யேற்​போம்.

பாமக தலை​வர் அன்​புமணி: தமிழக மக்​களின் இன்​றைய உண்​மை​யான தேவை சமூகநீதி உள்​ளிட்ட அனைத்து உரிமை​களு​ட​னும், சுதந்​திர​மாக​வும் வாழும் உரிமை தான். அதை ஜனநாயகம் என்ற கரு​வியைக் கொண்டு தான் வென்​றெடுக்க வேண்​டும்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலசெய​லா​ளர் இரா.​முத்​தரசன்: மதவெறி, சாதி ஆதிக்க சக்​திகளை அதி​காரத்தில் இருந்​தும், சமூக வாழ்​வில் இருந்​தும் வெளி​யேற்ற இந்​நாளில் உறு​தி​யேற்​போம். அனை​வருக்​கும் சுதந்​திர தின வாழ்த்​துக்​கள்.

தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: சுதந்​திர தினத்​தையொட்டி நாட்டு மக்​கள் ஒவ்​வொரு​வரும் தனிப்​பட்ட ஒவ்​வொரு​வரின் சுதந்​திரத்தை பாது​காக்​க​வும், ஒற்​றுமைக்​கும், நாட்​டின் பாது​காப்​புக்​கும் துணை நிற்​போம். அனை​வருக்​கும் சுதந்​திர தின வாழ்த்​துக்​கள்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: நம் முன்​னோர்​கள் நமக்​காகப் போராடிப் பெற்ற சுதந்​திரத்தை பேணிக்​காப்​ப​தோடு, சாதி, மத, இன, மொழி வேறு​பாடு​களைக் களைந்து நாம் அனை​வரும் இந்​தி​யர்​கள் என்ற ஒற்​றுமை உணர்​வோடு தாய்​நாட்​டின் வளர்ச்​சிக்​காகப் பாடுபட இந்​நாளில் உறு​தி​யேற்​போம்.

இவர்​களு​டன் கொங்​கு​நாடு மக்​கள் தேசிய கட்சி பொதுச்​செய​லா​ளர் ஈ.ஆர்​.ஈஸ்​வரன், இந்​திய தேசிய லீக் மாநில தலை​வர் நாகூர் ராஜா, தமிழ்​நாடு முஸ்​லிம் லீக்தலை​வர் வி.எம்​.எஸ்​.​முஸ்​த​பா உள்​ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்களும் சுதந்​திர தின வாழ்​த்துக்களை தெரி​வித்​துள்​ளனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *