`இந்திய சட்டத்தை பின்பற்றாவிடில் இங்கிருந்து வெளியேறுங்கள்’ – வாட்ஸ்அப்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

Spread the love

உடனே அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, வணிக நோக்கங்களுக்காக பயனர் தரவைப் பகிர்வதாக வாட்ஸ்அப்பை விமர்சித்தார். இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதி சூர்யகாந்த், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தைப் பின்பற்றவில்லையெனில் இந்தியாவில் இருந்து வெளியேறலாம். பொதுமக்கள் யாரின் தனியுரிமையிலும் நாங்கள் சமரசம் செய்து கொள்ளமாட்டோம்.

வாட்ஸ்அப் நிர்வாகத்தின் தனியுரிமை சட்டத்தை, படிக்காத மற்றும் ஏழை மக்களால் புரிந்து கொள்ள முடியுமா? தெருவில் வியாபாரம் செய்யும் நடைபாதை வியாபாரி, ஏழை பெண்கள் அல்லது தமிழ் மட்டுமே பேசத்தெரிந்தவர்களால் இந்த தனியுரிமைக் கொள்கையைப் புரிந்து கொள்ள முடியும?

டாக்டர் வாட்ஸ்அப்பில் மருந்துகள் பட்டியலை அனுப்பினால் நீங்கள் உடனே விளம்பரத்தை ஓடவிடுகிறீர்கள்” என்று தெரிவித்தார். 2024ம் ஆண்டு வாட்ஸ்அப் வெளியிட்ட தனியுரிமைக் கொள்கையின் அடிப்படையில் பயனர்கள் தொடர்ந்து வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்ப வேண்டுமானால் மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனங்களுடன் பயனர்களின் தரவுகளை பகிர்ந்து கொள்ள பயனர்கள் அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்தே வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *