பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று காலை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மரணம் குறித்து மதியம்தான் செய்தி வெளியானது. இறுதிச்சடங்குக்கு ஆம்புலன்ஸ் வந்த பிறகுதான் அவரது மரணம் குறித்து தெரிய வந்தது.
பாலிவுட் நடிகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தும் முன்பு அவரது உடல் இறுதிச்சடங்கிற்காக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அவரது உடல் இறுதிச்சடங்குகளுக்காக விலே பார்லேயில் உள்ள பவன் ஹென்ஸ் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தர்மேந்திராவின் மனைவி ஹேமாமாலினி, மகள் இஷா தியோல், சஞ்சய் தத், அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், சல்மான் கான், ஆமீர் கான் ஆகியோரும் வந்திருந்தனர்.
தர்மேந்திராவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ், பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட பல தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

ராஜ் தாக்கரே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தர்மேந்திரா சாமானிய மக்களின் ஹீரோ என்று கூறி நீண்ட ஒரு பதிவை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தர்மேந்திராவின் மரணம் இந்திய சினிமாவில் ஒரு சகாப்தத்தின் முடிவு.
தர்மேந்திரா ஜியின் மறைவு இந்திய சினிமாவில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. அவர் ஒரு சின்னத்திரை ஆளுமை; அவர் நடித்த ஒவ்வொரு பாத்திரத்திற்கும் கவர்ச்சியையும் ஆழத்தையும் கொண்டு வந்த ஒரு தனித்துவமான நடிகர்” என்று குறிப்பிட்டுள்ளார்.