இந்திய சிறைகளில் 70% விசாரணைக் கைதிகள்!

Dinamani2f2025 03 102fcyols3re2fjail Lockup.jpg
Spread the love

இந்திய சிறைச்சாலைகளில் 70% பேர் விசாரணைக் கைதிகளாக இருப்பதாக உள் துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது.

ஜாமீன் அல்லது அபராதத் தொகையை செலுத்தப் போதிய பணம் இல்லாததால், அவர்கள் சிறையிலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமர்வு இன்று (மார்ச் 10) காலை தொடங்கி நடைபெற்றது.

இதில் நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்த அறிக்கையில், சிறைச் சாலைகளில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துவருவது குறித்தும் அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எக்ஸ்-ரே ஸ்கேனர், போதைப் பொருள்கள் இருப்பைக் கண்டறியும் சோதனைக் கருவிகள் போன்ற தொழில்நுட்பங்களை சிறைகள் பயன்படுத்த வேண்டும்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சிறைகளில் போதைப்பொருள் நுழைவதைத் தடுக்கும் வகையில் வாயில்களில் கண்காணிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்.

சிறையில் 70% விசாரணைக் கைதிகள் உள்ளனர். அவர்கள் அளிக்க வேண்டிய அபராதத் தொகையைவிட, ஜாமீனுக்கு செலவழிக்கும் செலவை விட அவர்களை சிறையில் வைத்து பராமரிப்பதற்கான தொகை அதிகமாக உள்ளது.

இதனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய கைதிகளின் அபராதத் தொகைக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சிறைத் துறை போதிய நிதியை ஒதுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிக்க | சம்பல் வன்முறையில் சிறை சென்ற பெண்: விடுதலையாக உதவிய 120 கிலோ உடல் எடை!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *