இந்திய தேர்தல் ஆணையர் 2 நாள் பயணமாக கொடைக்கானல் வருகை | Election Commissioner arrives in Kodaikanal 

1341551.jpg
Spread the love

திண்டுக்கல்: இந்திய தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சந்து இரண்டு நாள் பயணமாக இன்று காலை கொடைக்கானல் வருகை தந்தார். இவரை திண்டுக்கல் ஆட்சியர் வரவேற்றார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு, இந்திய தேர்தல் ஆணையர் தனிப்பட்ட பயணமாக குடும்பத்தினருடன் இன்று வெள்ளிக்கிழமை வருகைதந்தார். மதுரை விமான நிலையத்தில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் அம்மையநாயக்கனூர் விருந்தினர் மாளிகையில் இந்திய தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சந்துவை சந்தித்து, திண்டுக்கல் ஆட்சியர் மொ.நா.பூங்கொடி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இன்றும், நாளையும் கொடைக்கானலில் தங்கி குடும்பத்தினருடன் சுற்றுலாத் தலங்களை பார்வையிடும் தேர்தல் ஆணையர், டிசம்பர் 1 ல் ஞாயிற்றுக்கிழமை காலை கொடைக்கானலில் இருந்து புறப்பட்டு ஊட்டிக்கு செல்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *