அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டு ஓபன்ஏஐ என்ற செய்யறிவு திறன் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன், இந்திய சாலை வரைபடங்கள் குறித்து நாட்டின் முன்னணி புத்தாக்க நிறுவனங்களின் தலைவர்களுடன் இன்று (பிப். 5) ஆலோசனை நடத்தினார்.
இதில், ஆல்ட்மேன் உடன் பேடிஎம் தலைமை செயல் அதிகாரி விஜய் சேகர் சர்மா, அன்அகாதெமியின் தலைமை செயல் அதிகாரி கெளரவ் முன்ஜால், ஸ்நாப்டீல் துணை நிறுவனர் குணால் பாஹல், சாயோஸ் துணை நிறுவனர் ராகவ் வெர்மா, லிக்ஸிகோ குழுவின் தலைமை செயல் அதிகாரி அலோக் பாஜ்பாய், ஹாப்டிக் தலைமை செயல் அதிகாரி ஆக்ரித் வைஷ், ஹெல்திஃபை மீ நிறுவனத்தின் துஷார் வஷிஷ்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.