இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிக்க மகளிர் அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
தென்னாப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டியை இந்திய மகளிர் அணி முழுமையாக வென்றனது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் இன்று தொடங்கியது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணியில் மரிஸான் கேப் அரைசதம் கடந்து 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 189 ரன்களைக் குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் ராதா யாதவ், பூஜா வஸ்திரேகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்திய அணி 190 எடுத்தால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறலாம்.