ஒவ்வொரு ஆண்டும் பல நூற்றுக்கணக்கான இந்தியர்கள் குவைத் வருகிறார்கள். நீங்கள் குவைத் சமூகத்திற்கு இந்தியத் தொடர்பைச் சேர்த்துள்ளீர்கள். இந்தியத் திறமை, தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியத்தின் சாரத்தைக் கலந்து, குவைத்தின் படிக்கட்டுகளில் இந்திய திறன்களின் வண்ணங்களை நிரப்பியிருக்கிறீர்கள்” என அவர் பேசினார்.
மேலும், புதிய குவைத்துக்கு தேவைப்படும் மனிதவளம், திறன் மற்றும் தொழில்நுட்பம் இந்தியாவிடம் உள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.