பாரீஸ் ஒலிம்பிக்ஸில் இந்திய ஹாக்கி அணி அயர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
அயர்லாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய ஹாக்கி அணி வெற்றிபெற்றது.
மொத்தமாக மூன்று லீக் போட்டிகளில் ஆடிய இந்திய அணி இரண்டில் வெற்றியும், அர்ஜென்டீனா அணிக்கு எதிரானப் போட்டியில் டிரா செய்திருந்தது.
மூன்று போட்டிகளின் முடிவில் 7 புள்ளிகளுடன் குரூப் பி பிரிவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.