டான்சானியாவை 18-0, கியூபாவை 13-0 என இந்தியா வீழ்த்தினாலும், பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியிடம் இந்தியா சமன் செய்தது. புதுமுகமாக ஹாக்கிப் போட்டியில் புகுந்த ரஷியாவிடமும், போலந்திடமும் இந்தியா திணறியது.
இறுதிப்போட்டியில் ஸ்பெயினுடன் மோதல். இந்திய அணியின் ஒவ்வொரு கோலுக்கும் ஸ்பெயின் அணியின் பெனால்டி கார்னர் வல்லுநரான ஜூவான் அமாட் பதில் கோல் போட, இறுதியில் ஒருவழியாக இந்தியா தங்கம் வென்றது. ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற 8ஆவது தங்கம் இது.
1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில், பலமான 12 நாடுகளின் ஹாக்கி அணிகளை இந்தியா எதிர்கொண்டது. அந்த ஒலிம்பிக்கில் பாகிஸ்தான் தங்கம் வெல்ல, இந்தியாவுக்கு 5ஆவது இடம்.
1988 சியோல் ஒலிம்பிக்கில் எப்போதும் இல்லாத புதுமையாக பிரிட்டன் தங்கம் வென்றது. இந்தியாவுக்கு 4ஆவது இடம் 1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் முதல் மூன்று இடங்களைக் கைப்பற்ற, இந்தியாவுக்கு 6ஆவது இடம்.
1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில், நெதர்லாந்து, ஸ்பெயின், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் முதல் மூன்று பதக்கங்களை வெல்ல, இந்தியாவுக்கு 8ஆவது இடம். 2000 சிட்னி ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த இடம் 7. 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கிலும் இந்தியாவுக்கு அதே இடம்தான்.