இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு| UK-based Hinduja Group will invest Rs. 7,500 Cr in TN

Spread the love

லண்டனை தலைமையிடமாகக் கொண்ட இந்துஜா குழுமம், தமிழ்நாட்டின் மின்சார வாகனச் சூழலில், பேட்டரி சேமிப்பு அமைப்புகளுக்காக ரூ.7,500 கோடி முதலீடுகளை செய்யவுள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செய்யப்பட்ட இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் குறித்து, தமிழக அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தியில், –

பிரிட்டன் தலைநகா் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இந்துஜா குழுமம் செயல்படுகிறது. இது, மின்சார வாகனங்களுக்கான செல் மற்றும் பேட்டரி உற்பத்தி, சாா்ஜிங் நிலையங்களுக்கான வணிகங்களில் ரூ.7,500 கோடி முதலீடு செய்ய தமிழ்நாடு அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம், மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்பு விரிவுபடுத்தப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபா்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்ட இந்துஜா குழுமத்துடனான புரிந்துணா்வு ஒப்பந்தமானது, முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணத்தில் மிக முக்கியமான முன்னெடுப்பாகும்.

மேலும், அஸ்ட்ராஜெனெகா நிறுவனமானது இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மூன்றாவது தொழில் முதலீட்டை அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள அதன் உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மையத்தை ரூ.176 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யவுள்ளது. இந்த முதலீடுகள் பிரிட்டனில் முதல்வரின் சந்திப்புகளின் போது வெளியிடப்பட்ட முந்தைய அறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

அஸ்ட்ராஜெனெகா நிறுவனமானது, அதிநவீன ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் கண்டுபிடிப்பு மற்றும் மருத்துவ சேவைகள் வழங்குவதில் தொழில்நுட்ப மாற்றத்தைச் செயல்படுத்துகிறது. இந்த நிறுவனமானது, இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அதன் மூன்றாவது முதலீட்டைச் செய்துள்ளது. இது மாநிலத்தின் திறன் வளா்ச்சி மற்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நிா்வாகத்தின் மீதுள்ள வலுவான நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈா்க்கும் வகையில், ஜொ்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளாா். இந்தப் பயணத்தின் மூலமாக, தமிழ்நாட்டுக்கு ஈா்க்கப்பட்ட மொத்த முதலீடுகளின் மதிப்பு ரூ.15,516 ஆகும். இதன்மூலம், 17 ஆயிரத்து 613 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *