இந்துத்துவம் தாராள மனப்பான்மை கொண்டது. சகிப்புத்தன்மை கொண்டது. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அது மதச்சார்பற்றதாக இருந்தது, மதச்சார்பற்றதாகவே இருக்கும்.
அதற்குக் காரணம் பா.ஜ.கவோ அல்லது ஆர்.எஸ்.எஸ் அல்ல. இது பாரதிய இந்து கலாசாரம். சனாதன கலாசாரம் முழு உலகின் நலனுக்காகவும் வாழும் வாழ்வை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது என்றார். அதே கருத்துதான் என்னுடையதும்” என்றார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இம்ரான் மசூத், “குறைந்தபட்சம் காட்கரிக்காவது காற்று மாசை ஒப்புக்கொள்ளும் துணிச்சல் இருந்தது. நீங்கள் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு சொல்லும்போது, இதற்கும் ஒரு தீர்வைக் கூறுங்கள்.
வாகனங்கள் மட்டும்தான் மாசுபாட்டிற்குக் காரணம் என்று நான் நினைக்கவில்லை. டெல்லிக்கு வெளியேயும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன” என்றார்.