புதுதில்லி: வேதாந்தா குழும நிறுவனமான, இந்துஸ்தான் ஜிங்க், நடப்பு நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில், 2 சதவிகிதம் அதிகரித்து 2,56,000 டன்னாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்துஸ்தான் ஜிங்க் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனம் 2,52,000 டன் உலோகத்தை உற்பத்தி செய்துள்ளது. அதே வேளையில் இரண்டாவது காலாண்டில் உலோக உற்பத்தி 2,41,000 டன்னிலிருந்து 2,62,000 டன்னாக உயர்ந்தது.
சுத்திகரிக்கப்பட்ட துத்தநாக உற்பத்தி இரண்டாவது காலாண்டு உடன் ஒப்பிடும்போது ஏழு சதவிகிதம் அதிகரித்து 1,98,000 டன்னாக உள்ளது.
2024ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடும்போது சுத்திகரிக்கப்பட்ட ஈய உற்பத்தி 12 சதவிகிதம் அதிகரித்து 63,000 டன்னாக உள்ளது.
விற்பனை செய்யக்கூடிய வெள்ளி உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு 2 சதவிகிதம் அதிகரித்துள்ளது.