இப்போது ஏன் தங்கம், வெள்ளி விலை குறைகிறது?
கடந்த நான்கு தினங்களாக தங்கம், வெள்ளி விலை குறைந்து வருகிறது. இதற்கு சந்தையில் நடக்கும் கரெக்ஷன் தான் மிக முக்கிய காரணம்.
பங்குகள் தொடங்கி உலோகங்கள் வரை சந்தையில் எது தொடர்ந்து உச்சம் தொட்டு வந்தாலும், அது ஒருகட்டத்தில் கரெக்ஷனைச் சந்திக்கும். இது இயல்பான ஒன்று தான்… இயற்கை தான்.
அதனால், தங்கம், வெள்ளி விலை குறைகிறதே… முதலீடு என்ன ஆகும் என்கிற பயம் வேண்டாம்.
2025-ம் ஆண்டின் ஆரம்பத்தில் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தவர்கள், இப்போது அவர்களுக்கு வேண்டுமானால், தாராளமாக பிராஃபிட் டேக்கிங் செய்யலாம்.
2025-ம் ஆண்டின் இறுதியில் முதலீடு செய்தவர்கள் சற்று பொறுப்பது நல்லது.

தங்கம், வெள்ளி முதலீட்டில் ரிஸ்க் உள்ளதா?
அமெரிக்காவில் ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதத்தைக் குறைத்தது… அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது… முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்கம், வெள்ளியில் முதலீடு செய்து வந்தது… போன்றவை தான் 2025-ம் ஆண்டில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததற்கான காரணம்.
இதற்கெல்லாம் நேர்மாறாக இந்த ஆண்டு நடந்தால், தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் இருக்கலாம்.
அதனால், மொத்தமாக தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. நீண்ட கால முதலீட்டிற்கு எப்போதுமே தங்கம், வெள்ளி நல்ல ஆப்ஷன். லம்சம் முதலீடு என்று வந்துவிட்டால், சற்று யோசிக்க வேண்டும்.
டிரேடிங் செய்பவர்கள் வேண்டுமானால் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம். ஆனால், மிக மிக கவனம் தேவை.