”இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது” – சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தகவல் | Minister Sakkarapanispeech in tn assmebly

1379966
Spread the love

சென்னை: டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் 3-ம் நாள் கூட்டம் இன்று (அக்., 16) தொடங்கியது. சட்டப்பேரவையில் இன்று 7 மசோதாக்கள் தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இது குறித்து சட்டபேரவையில் பேசும்போது: டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் நெல் குறுவை சாகுபடியானது கடந்த ஆண்டு 3.5 லட்சம் ஏக்கராக இருந்தது. தற்போது 6.31 லட்சம் ஏக்கராக உள்ளது. இது வரலாற்று சாதனையாக உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 13 மடங்கு நெல் உற்பத்தி வரத்து அதிகரித்துள்ளது. முதல்வர் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி ஒரு ஆய்வு கூட்டத்தை நடத்தினார். அப்போது டெல்டா மாவட்டங்களுக்கு சென்று உடனடியாக விவசயிகள் உற்பத்தி செய்துள்ள நெல்லை பெற்று அதை சேமித்து வைத்து மற்ற மாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்தார். அதனடிப்படையில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்கள் அறுவை ஆலைகளுக்கு துரிதமாக அனுப்பப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டதை விட, திமுக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு அதிகளவிலான சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் 3.3 லட்சம் மெட்டிக் டன் கொள்ளவு கொண்ட 25 திறந்த வெளி சேமிப்பு கிடங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு 77.196 மெட்டிக் டன் சேமித்து வைக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *