“அக்ஷயம் 365′ என்பது ‘MUDRA OOH’ நிறுவனமும், சென்னை டவர்ஸ் ரோட்டரி கிளப்பும் இணைந்து செய்யும் ஒரு சிறிய முயற்சி. இதன் முக்கிய நோக்கம் ஓர் உணவு மையம் தொடங்கி அங்கு அடுத்த 365 நாட்களுக்கும் தேவை இருப்பவர்களுக்கு உணவு அளிக்கவேண்டும் என்பதே ஆகும்.
இந்த முயற்சிக்கு இடம் கொடுத்த ’சென்னை மாநகராட்சி’க்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.
இந்த உணவு மையம் டி.நகர், பாண்டி பஜார் போலீஸ் ஸ்டேஷன் பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே தினமும் மதியம் 12 மணிக்கு, தேவைப்படும் யாருக்கும் மரியாதையோடும் அன்போடும் உணவு வழங்கப்படும்.
சிறிய சிறிய அன்பான செயல்களை, தொடர்ந்து செய்யும்போது அது சமூகத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்பது எங்களின் நம்பிக்கையாகும்.
தேவை இருப்பவர்களுக்கு இந்தச் செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.