இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | daily horoscope

1370039
Spread the love

மேஷம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு அமையும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கூடும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

ரிஷபம்: திட்டமிட்ட வேலைகளை முடிக்க முடியாமல் திணருவீர் உடல்நலக் குறைவு, மனச்சோர்வு வரும். வியாபாரத்தில் சூடு பிடித்து, ஓரளவு லாபம் உண்டு. அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.

மிதுனம்: வெளிவட்டாரத் தொடர்பால் சில பணிகளை முடிப்பீர். குடும்பத்தாருடன் மனம் விட்டுப் பேசுவீர். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

கடகம்: முகப் பொலிவுடன் காணப்படுவீர். நிறைவு பெறாமல் இருந்த காரியங்களை முடிப்பீர். தம்பதிக்குள் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்: தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர். வியாபாரத்தில் பெரிய அளவில் பேசப்படுவீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர்.

கன்னி: மனநிறைவுடன் காணப்படுவீர். குடும்பத்தில் அனுசரித்துப் போவீர். பிள்ளைகளிடமிருந்த மனக்கசப்பு விலகும். வியாபார கடனை பைசல் செய்வீர். அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

துலாம்: குடும்பத்தினரால் விரயச் செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்கவும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

விருச்சிகம்: மறைமுக போட்டிகளுக்கு பதிலடி தருவீர். பணிகளை விரைந்து முடிப்பீர். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். அலுவலக ரீதியான பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு.

தனுசு: தள்ளி போய் கொண்டிருந்த சுபகாரியம் கூடி வரும். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

மகரம்: சுறுசுறுப்புடன் செயல்படுவதால் காரியங்கள் வெற்றியடையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியை தள்ளி வைக்கவும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

கும்பம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாயாரின் மருத்துவ செலவுகள் குறையும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனையாகும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிட்டும்.

மீனம்: தடைபட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு காண்பீர். அலுவலகத்தில் யாரையும் குறை கூறாதீர். வியாபாரத்தில் லாபம் உண்டு.




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *