” இந்த போட்டோ எடுத்தது மறக்க முடியாத தருணம்”- விஜய், அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த வெங்கட் பிரபு| “An Unforgettable Moment from Mankatha Shoot” – Venkat Prabhu Shares Photo with Vijay & Ajith

Spread the love

வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜித், த்ரிஷா, அர்ஜுன் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான படம் “மங்காத்தா’.

ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் இன்று திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிறது.

அஜித்தின் 50-வது படமான ‘மங்காத்தா’ 15 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் ஆனதால் ரசிகர்கள் உற்சாகமானக் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டிருக்கின்றனர்.

'மங்காத்தா'வில்...

‘மங்காத்தா’வில்…

இந்நிலையில் இயக்குநர் வெங்கட்பிரபு விஜய், அஜித்துடன் எடுத்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து ‘மங்காத்தா’ குறித்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

” ‘மங்காத்தா’வில் மீண்டும் இன்று வாழும் நேரம். படத்தின் க்ளைமாக்ஸை சொல்லி அனுபவத்தை கெடுத்து விடாதீர்கள்.

மங்காத்தா படப்பிடிப்பின் போது இந்த போட்டோ எடுத்தது மறக்க முடியாத தருணம்.

எதிர்காலத்தில் இப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்று நான் சொல்வது பொய்யாக வேண்டும் என விரும்புகிறேன்.

மங்காத்தாவை கொண்டாடுவோம்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *