டொவினோ தாமஸ், கயாடு லோஹர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பள்ளிச்சட்டம்பி’. இப்படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி இருக்கிறார்.
ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (மார்ச்.30) நடைபெற்றது. இதில் டொவினா தாமஸ் கலந்துகொண்டார்.
அப்போது அவரிடம் ” நீங்களும் தான் “லோகா’ படத்தில் நடித்திருக்கீர்கள். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டானது. ஆனால் படக்குழு உங்களைப் பற்றி எங்கேயும் பேசவில்லை. துல்கர் சல்மானுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்னை?” என்று கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், ” என்ன பத்தி பேசலையா? ஏன் என்ன பத்தி பேசலன்னு கால் பண்ணி துல்கர் கிட்ட கேக்குறேன்” என சொல்லி நகைச்சுவையாக சிரித்தார்.
தொடர்ந்து பேசிய டொவினா, “நான், துல்கர் சல்மான் எல்லாம் ரொம்ப நாளா சேர்ந்து நடிச்சிருக்கோம். நான் அசிஸ்டன்ட் டைரக்டரா வொர்க் பண்ணதே துல்கரோட படத்தில தான்.