பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் 2 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே எனப்படும் நேரடியாக இறுதிப் போட்டியாளரைத் தேர்வு செய்யும் போட்டிகள் நடைபெற்றது.
இதில், அனைத்து போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்து அதிகப் புள்ளிகளைப் பெற்ற ரயான் முதல் நபராக இறுதிப் போட்டிக்குச் செல்ல தகுதிப் பெற்றார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் ஜெஃப்ரி மற்றும் அன்ஷிதா வெளியேறிய நிலையில், இந்த வாரமும் ராணவ் மற்றும் மஞ்சரி ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணவ் வெளியேறினார். இன்றைய நாள் நடைபெறும் நிகழ்ச்சியில் மஞ்சரி வெளியேறுவார். தற்போது பிக் பாஸ் வீட்டில் 8 போட்டியாளர்கள் உள்ளனர்.