மகாசேனா (தமிழ்):
இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கி விமல், ஸ்ருஷ்டி டாங்கே, யோகி பாபு நடித்துள்ள “மகாசேனா’ திரைப்படம் இன்று (டிசம்பர் 12) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
படையப்பா (ரீ-ரிலீஸ்):
ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா நடிப்பில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை, ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (டிசம்பர் 12) திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.
நாங்கள் (ரீ ரிலீஸ்):
இயக்குநர் அவினாஷ் பிரகாஷ் இயக்கத்தில் இந்தாண்டு ஏப்ரல் மாதம் ‘நாங்கள்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது அத்திரைப்படத்தை இன்று (டிசம்பர் 12) திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

மோக்லி (தெலுங்கு):
இயக்குநர் சந்தீப் ராஜ் இயக்கத்தில் ரோஷன் கனகலா நாயகனாக நடித்திருக்கும் இத்திரைப்படம் இன்று (டிசம்பர் 12) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
அகண்டா 2: தாண்டவம் (தெலுங்கு):
இயக்குநர் போயபாட்டி ஸ்ரீனு இயக்கத்தில், நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்திருக்கும் இத்திரைப்படம் பான் இந்தியா படமாக திரையரங்குகளில் இன்று (டிசம்பர் 12) வெளியாகியுள்ளது. இப்படத்தில் சம்யுக்தா மேனன், ஆதி பிணிசெட்டி மற்றும் ஹர்ஷாலி மல்ஹோத்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.