தற்போது பங்குச்சந்தையில் முதலீடு செய்யும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும் என்றும், அதற்கான மூன்று காரணங்களையும் விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.
“1. நேற்று முன்தினம் (ஜனவரி 5), NSE 26,373 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. ஆனாலும், அன்று சரிவில் தான் சந்தை முடிந்தது. நேற்று (ஜனவரி 6) சந்தை சரிவில் தான் முடிந்தது.
என்ன தான், புதிய உச்சத்தைத் தொட்டாலும், அதையொட்டி வர்த்தகம் நடக்க சந்தை தடுமாறி வருகிறது. இதை சந்தையின் கன்சாலிடேஷன் நேரம் என்று எடுத்துக்கொள்ளலாம்.

2. இன்று முதல் 2025-26 நிதியாண்டின் காலாண்டு முடிவுகள் வெளியாக உள்ளன. அதனால், அந்த முடிவுகளைப் பொறுத்து, முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை மாற்றத் தொடங்குவார்கள்.
3. ஜப்பான் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது சீனா. இது ஜப்பான் சந்தையைப் பாதிக்கும். இன்று காலையில் ஜப்பான் சந்தை சரிவில் தான் தொடங்கியுள்ளது.
ஆசியாவில் இருக்கும் ஒரு சந்தையின் பாதிப்பு, இந்திய சந்தைப் பக்கமுமே சற்று பிரதிபலிக்கும்.
ஆக, இந்த மூன்று காரணத்தினால், இந்திய பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை நிலவலாம். அதனால், இன்று முதலீட்டாளர்கள் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம்”.