இனி சொத்தை பத்திரப் பதிவு செய்ய 'இந்த' ஆவணங்கள் மிக முக்கியம்! – தமிழக மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல்

Spread the love

2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் பத்திரப்பதிவு மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

ஒப்புதலுக்காக, அந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் அதை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார்.

தற்போது, அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார் திரௌபதி முர்மு.

திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு

பத்திரப் பதிவு மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது…

> ஒரு சொத்தைப் பத்திரப் பதிவு செய்யும்போது, அதன் அசல் ஆவணங்களைக் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும்.

> குறிப்பிட்ட அந்தச் சொத்து மூதாதையர் சொத்தாக இருந்து அதற்கு மூலப்பத்திரம் இல்லையென்றால், அதற்கான வருவாய்த் துறையின் பட்டாவைச் சமர்ப்பிக்க வேண்டும்.

> ஒருவேளை அந்தச் சொத்து அடமானத்தில் இருந்தால், அடமானம் பெற்ற நபரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். அந்தச் சான்றை பத்திரப் பதிவின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

> சொத்தின் அசல் ஆவணம் தொலைந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். அந்தச் சூழலில், இது சம்பந்தமாக காவல்துறையில் புகாரளித்து, ‘ஆவணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்கிற சான்றிதழைப் பெற வேண்டும்.

கூடுதலாக, ஆவணம் காணாமல் போனது சம்பந்தமாக உள்ளூர் நாளிதழில் விளம்பரம் செய்து, அதன் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *