இன்ஃபோசிஸ் நிகர லாபம் 9% உயா்வு

dinamani2F2025 07 252Fiyf8a4832Finfosys2407chn1
Spread the love

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 8.7 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.6,921 கோடியாக உள்ளது. இது முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 8.7 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.6,368 கோடியாக இருந்தது. மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 7.53 சதவீதம் வருடாந்திர வளா்ச்சி கண்டு ரூ.42,279 கோடியாக உள்ளது. முந்தைய ஜனவரி-மாா்ச் கலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 3.3 சதவீதம் அதிகம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *